கமலின் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.! யார் யார் இருக்காங்க தெரியுமா.?
இதனிடையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் புது முயற்சியாக சின்னத்திரை நடிகைகள் சிலரையும் இந்த திரைப்படத்தை நடிக்க வைத்துள்ளார். அதில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, வீஜே மகேஸ்வரி போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் ஷிவானி நாராயணன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விக்ரம் திரைப்படத்தை வருகின்ற மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கமலஹாசன் சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வந்த கமல் சில வாரங்களுக்கு முன்பு தான் பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்தது அதனை அடுத்து உடனடியாக ஹாட்ஸ்டார்யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் விக்ரம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லோகேஷ் கமலுடன் பேசிக் கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் ஒன்றை லோகேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்


Comments
Post a Comment