விக்ரம் – துருவ் இணைந்து நடித்துள்ள ‘மகான்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘மகான்’ படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.


Comments
Post a Comment